LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து
கப்ரியேல் கர்சியா மார்க்வெய்ஸின் LOVE IN THE TIME OF CHOLERAவை முன்வைத்து சமீபத்தில் நாவல்களை மூலக்கதைகளாகக் கொண்ட மூன்று சினிமாக்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இது வாய்ப்பானது ஓர் எதிர்பாராத அமைவில் ஏற்பட்டதுதான். முதலில் NO COUNTRY FOR OLD MEN. கொர்மாக் மக்கார்தியின் அதே தலைப்பிலான நாவலைச் சினிமாவாக்கியது. அடுத்தது கப்ரியேல் கர்ஸியா மார்க்வெய்ஸின் நாவலான LOVE IN THE TIME OF CHOLERA சினிமாவாகி வந்திருந்தது. மூன்றாவது ATONEMENT. இது இயன் மக்கீவானின் ATONEMENT நாவலைப் படமாக்கியது. இவை மூன்றும் அமெரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து ஆகிய மூன்று பெரும் நாடுகளை மய்யமாகக் கொண்டவை. மட்டுமில்லை, பெருவாரியான மற்றைய நாவல்கள் சினிமாவாகியபோது தலைப்பு மாற்றம் பெற்றதுபோலன்றி, இவை நாவலின் தலைப்புகளையே சினிமாவாக்கத்திலும் கொண்டிருந்தன. நாவலின் மூலத்திலிருந்து மிகவும் மாறுபட்டுவிடாதபடி இம் மூன்று சினிமாக்களும் எடுக்கப்பட்டிருந்ததை தலைப்புகள் சுட்டிநிற்பது முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டும். ஒரு நாவலைப் படமாக்குவது எப்படியென்பதற்கு இம்மூன்றுமேகூட உதாரணமாகக் கூடியவை. ஆனாலும் மிகச் சமீப...