உண்மையைத் தேடுதல்…:2
உண்மையைத் தேடுதல்… Bhopal: A Prayer for Rain (போபால்: ஒரு மழைக்கான பிரார்த்தனை) போன வாரத்தில் ஒருநாள் முன்னதாக அறிய வந்திராத ‘போபால்: ஒரு மழைக்கான பிரார்த்தனை’ என்ற ஒரு வரலாற்றுப் புனைவு வகைச் சினிமாவை எதிர்பாராதவிதமாக பார்க்கிற சந்தர்ப்பமொன்று எனக்கு நேர்ந்தது. விருப்பத்தோடுதான் பார்க்கச் சென்றிருந்தேன். அந்த பெயரின் ஆதர்~ம், அந்தச் சினிமாவில் சம்பந்தப்பட்டிருந்த இந்தியக் கலைஞர்களின் ஆற்றல்பற்றிய முன்னறிகை, ஏனைய உலகக் கலைஞர்களின் பங்களிப்புகள் யாவும் அந்த விருப்பத்தை என்னில் ஏற்படுத்தியிருந்தன. அன்றைய எனது இரவின் பெரும்பொழுதையும் தூக்கமற்று கலங்கியிருக்கும்படி செய்துவிட்டது சினிமா. இந்தியாவின் மத்தியபிரதேசத்திலுள்ள போபால் என்ற இடத்தில் 1984 மார்கழி 2ம் மற்றும் 3ம் திகதிகளில் யூனியன் கார்பைட்டின் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவினால், அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் மரணம்பற்றியதும், இற்றையவரை ஒன்றரை லட்சம் மக்கள்வரை பாதிக்கப்பட்டிருப்பது பற்றியதுமான சினிமா அது. அச் சம்பவம் நடந்தபோது நான் இந்தியாவில் நின்றிர...