Friday, July 17, 2015

உண்மையைத் தேடுதல்…:2

உண்மையைத் தேடுதல்…

Bhopal: A Prayer for Rain
(போபால்: ஒரு மழைக்கான பிரார்த்தனை)

போன வாரத்தில் ஒருநாள் முன்னதாக அறிய வந்திராத ‘போபால்: ஒரு மழைக்கான பிரார்த்தனை’ என்ற ஒரு வரலாற்றுப் புனைவு வகைச் சினிமாவை எதிர்பாராதவிதமாக பார்க்கிற சந்தர்ப்பமொன்று எனக்கு நேர்ந்தது. விருப்பத்தோடுதான் பார்க்கச் சென்றிருந்தேன். அந்த பெயரின் ஆதர்~ம், அந்தச் சினிமாவில் சம்பந்தப்பட்டிருந்த இந்தியக் கலைஞர்களின் ஆற்றல்பற்றிய முன்னறிகை, ஏனைய உலகக் கலைஞர்களின் பங்களிப்புகள் யாவும் அந்த விருப்பத்தை என்னில் ஏற்படுத்தியிருந்தன.

அன்றைய எனது இரவின் பெரும்பொழுதையும் தூக்கமற்று கலங்கியிருக்கும்படி செய்துவிட்டது சினிமா.
இந்தியாவின் மத்தியபிரதேசத்திலுள்ள போபால் என்ற இடத்தில் 1984 மார்கழி 2ம் மற்றும் 3ம் திகதிகளில் யூனியன் கார்பைட்டின் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவினால், அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் மரணம்பற்றியதும், இற்றையவரை ஒன்றரை லட்சம் மக்கள்வரை பாதிக்கப்பட்டிருப்பது பற்றியதுமான சினிமா அது.

அச் சம்பவம் நடந்தபோது நான் இந்தியாவில் நின்றிருந்தேன். பத்திரிகைகளிலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் செய்திகளை உடனுக்குடன் அறிந்து இந்தியாவே அதிர்ந்துபோயிருந்த சம்பவம் அது. இன்றுவரை உலகில் நடைபெற்ற ஆகக் கூடிய அழிவு நேர்ந்த தொழிற்சாலை விபத்தாக போபாலே கொள்ளப்படுகின்றது.

நிகழ்வின்போது அடைந்த துயரத்தைவிட சினிமா மனத்தை உலுக்கும்படியாகவே அமைந்திருந்தது.

சஞ்சொய் ஹ~hரிகாவின் ‘Bhopal: Lessons of a Tragedy’ என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு இச்சினிமாவின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. கால் பென், மார்டின் சீன், மிஸ்ஸா பார்டன், பகுன் தக்ரார், ராஜ்பால் யாதவ் போன்ற சிறந்த நடிகர்கள் நடித்திருந்தார்கள். புனைவென்பது தென்படாது சூழலும், பாத்திரங்களும் மிக யதார்த்தமாயிருக்கும்படி மிகுந்த கவனத்தோடு படப்பிடிப்பு செய்யப்பட்டிருந்தது. ஒளியமைப்பு, படப்பிடிப்பு, நடிப்பு, உரையாடல் என எதிலும் குறைசொல்ல பெரும்பாலும் எதுவும் இருந்திருக்கவில்லை. இத்தனையிருந்தாலும் இச்சினிமாவை என்னால் முழுதாகப் பாராட்ட முடியவில்லை.

இச் சினிமாவின் தயாரிப்புக்கான பணிகள் 2010லேயே தொடங்குவதற்குத்தான் திட்டமிருந்தது. ஆனாலும்  விநியோகத்தர்களின் வியாபாரப்படுத்தும் நிலைமைகளின் சாத்தியமின்மை காரணமாக தாமதமாகவே தொடங்கப்பட்டது.  இறுதியாக தயாரிப்பு தொடங்கி பதினெட்டு மாதங்களின் பின்னால் 2013 கான்ஸ் படவிழாவில் திரையிட்டுக் காட்டக்கூடியதாக இச்சினிமா முடிந்திருந்தது. 2014 கார்த்திகையில் ஐக்கிய அமெரிக்காவிலும், அவ்வாண்டு மார்கழியில் இந்தியாவிலும் இது காண்பிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் திரையிடப்பட்டபோது போபால் விபத்துக்கான தீர்வுக்காய்ப் போராடும் அமைப்புகளின் எதிர்ப்பு, விபத்தின் உண்மை தெளிவாக சினிமாவில் காட்டப்படவில்லையென்ற காரணத்தின்மீது எழுந்திருந்தது.

ஆயினும் மத்தியபிரதேச அரசு சினிமாவுக்கு வரிவிலக்களித்து வரவேற்றது. வா~pங்ரன் போஸ்ற் பத்திரிகையின் சினிமா விமர்சகரான ஸ்ரீபானி மெர்ரி, ‘இந்தச் சினிமா இருந்திருக்கவேண்டிய அளவுக்கான உணர்வுபூர்வத்தோடு இருக்கவில்லை’ என்று விமர்சித்திருந்தார். வேறும் பல இந்திய, சர்வதேச பத்திரிகைகளின் சினிமா விமர்சகர்கள் தயாரிப்பாளரும், நெறியாளுநரும், பிரதியாக்ககாரரும் போபாலில் நடந்த உண்மையை தெளிவாக வெளிக்கொணரவில்லையெனவே குற்றம் சாட்டியிருந்தனர்.
அதன் பின்னணி சந்தேகப்படக் கூடியதாக இருந்தது. நெறியாளராகிய ரவி குமார் இதை மறுத்திருந்தார்.

வறுமையைத் தீர்ப்பதற்கு வேறு முகாந்திரங்களற்றிருந்த போபாலில் யூனியன் கார்பைட்டின் வருகையும், அதன் இருப்பும் அந்த மக்களது வாழ்க்கைக்கான ஒற்றை மார்க்கமாக இருந்ததை சினிமா சொல்லிச் செல்கிறது. அதுவே உண்மையாகவும் இருந்திருக்க முடியும். ஆனால் ஆபத்பாந்தவனாக வந்த யூனியன் கார்பைட், அசுரனாக மாறியதுதான் உண்மையில் நடந்தது.

தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதிருந்ததையும், இரசாயன வாயு தரமற்ற  கொள்கலன்களில் சேமிக்கப்படுவது ஆபத்தாக முடியும் என்பதையும், உபயோகிக்கப்படும் இரசாயனப் பொருள் என்ன என்பதுபற்றியும் ‘போபால் செய்தி’ பத்திரிகை ஆசிரியரான மொட்வானி (கல் பென்) வெளிப்படுத்துகிறபோது, அதை மிக அநாயாசமாக ‘சிவப்புப் போராளிகளின் புகார்’ என்ற ஒற்றை வார்த்தையில் நிர்வாகம் அலட்சியப்படுத்திவிடுகிறது.

இந்திய நிர்வாகத்திலுள்ள லஞ்ச அவலத்தைத் தெரிந்த ஒருவருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினால் இக் கேள்விகளால் எழும் பிரச்னைகளை எவ்வாறோ சமாளித்துவிட முடியுமென்பது சந்தேகப்படக்கூடியதாய் இருக்கமுடியாது. நிர்வாகம் அதைத்தான் செய்தது.

யூனியன் கார்பைட்டின்மீது மட்டுமல்ல, இந்திய அரசாங்கத்தின் மீதுகூட சமமான குற்றம் சுமத்த சினிமா இந்த இடத்தில் ஒரு வெளியை விட்டுவைத்திருக்கிறது.

1984 மார்கழி 2ம் திகதி நச்சு வாயு கசிவடையத் தொடங்கியதும் மனிதர்கள் மூச்சுவிட முடியாது திணறி விழுந்து சாகிறார்கள். அவர்களது மேனி எரி காயங்கள் அடைந்தனபோல் பிளந்து போகின்றன. தப்பியோடும் மனிதர்கள் வழியெங்கும் செத்துச் செத்து விழுகிறார்கள்.

தொழிற்சாலை மேலதிகாரி வாரன் ஆன்டர்ஸன் (மார்டின் சீன்) தப்பியோடிவிடுகிறான் அமெரிக்காவுக்கு. மட்டுமில்லை, வழக்கு விசாரணைக்கும் வராதிருக்கிறான். அவனை அனுப்பிவைக்க அமெரிக்க அரசாங்கமே மறுத்துவிடுகிறது. 470 மில்லியன் டாலர் ந~;டஈடு வழங்கவேண்டுமென்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. ஆனால் 20 மில்லியன் டொலரைக் கொடுப்பதோடு யூனியன் கார்பைட் முடித்துக்கொள்கிறது. இது சிவப்புத் தொழிலாளரின் நாசவேலையென்றே அது கடைசிவரை வாதிட்டுநின்றது. அத்தனை இழப்புகளுக்காக ஒரு மன்னிப்பைக்கூட யூனியன் கார்பைட் இறுதிவரை கேட்டுக்கொள்ளவில்லை.

இவ்வளவு தெளிவாக எல்லாவற்றையும் காட்சிப்படுத்தி வந்த சினிமா, விபத்தின் பின் சினிமா நிறைவுறுவதற்கு முந்திய ஐந்தாவது நிமிஷத்தில், தற்போதைய போபாலினைக் காட்டுகிறது. அதையும் Pசநளநவெ னுயல என்ற தலைப்பினூடாக. வறுமையின் அவலத்திலிருந்த போபால் விபத்தின் பின் மறுஜென்மம் எடுத்திருக்கிறது. போக்குவரத்து வசதிகளென்ன… குடிசைகளுக்குப்  பதிலாக சீமெந்து வீடுகளென்ன… வெளீரிடும் மசூதிகளும், கோவில்களும், தேவாலயங்களுமென்ன… மொத்தத்தில் போபாலே மாறிப்போயிருக்கிறது.

எனக்கு மனம் துண்ணென்றது இந்த இடத்தில். சினிமா முழுக்க காட்டப்பட்ட அத்தனை சோகத்தையும் உறிஞ்சவா இந்தக் காட்சி? இது யாரைக் குளிர்விக்க? அல்லது எந்த நிலைமையைத் தணிவிக்க? யூனியன் கார்பைட் செய்தது மிகப்பெரும் தவறுதான், ஆனாலும் அதனால் மக்களுக்கு லாபமும் ஏற்பட்டிருக்கிறது என்ற மனநிலையை ஏற்படுத்த எது செய்தது?

ஸ்ரீபானி மெர்ரிக்கு உணர்வுபூர்வத்தின் போதாமை தோன்றியது இந்த இடத்தின் காரணமானதாக இருக்குமென்றே எனக்குத் தென்படுகிறது.
இந்த ஒற்றைக் காட்சியின் மூலம் சினிமா சொல்லவந்த உணர்வையே திசைமாற வைத்துவிடுகிறார் நெறியாளுநர். இதை பிரக்ஞைபூர்வமில்லை என்று சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொண்டுவிட முடியாது.

மெதில் இசோ சயனேற் (Methyl iso cyanate) எனப்படும் கிருமி நாசினி தயாரிப்புக்கான இந்த இரசாயனம் நீரில் ஐதாகக்கூடியது. ஆனாலும் உபயோகிக்கப்படும் இரசாயனம் என்னவென்பது நிர்வாகத்தால் இரகசியமாகவே வைக்கப்படுகிறது. தொழிற்சாலையில் புதிதாக வேலைக்குச் சேரும் திலிப்பிற்கு (ராஜ்பால் யாதவ்) விரைவிலேயே பத்திரிகையாளன் மொட்வானிமூலமாகத் தெரிந்துவிடுகிறது, மெதில் இசோ சயனேற் கசிவே சமீபத்தில் ஏற்பட்டிருந்த ஒரு தொழிலாளியின் மரணமென்பது. இரசாயனப் பொருள் நீரில் ஐதாகும் வி~யத்தையும் அவன் அறிந்துவிடுகிறான். சில இரவுகளில் மொட்டைமாடியில் நி~;டை கூடியவன்போல் அவன் கலங்கியிருப்பது கண்டு அவனது மனைவி கேட்பாள் காரணம். அதற்கு மழை வருவதற்காக பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதாகச் சொல்வான் திலிப். இந்த நச்சு வாயுவிலிருந்து தப்பிக்க மழைவேண்டி ராஜ்பால் செய்யும் பிரார்த்னை காரணமாக இந்தச் சினிமாவின் பகிரங்க காட்சிப்படுத்தலுக்காக ‘வி~வாயு கசிந்த நகரம்’ என்ற ஒரு பெயரும் பரிசீலிக்கப்பட்டது. அந்தப் பெயரிலேயே அது இப்போது வெளிவந்திருப்பதாகவும் தெரிகிறது.

இவ்வளவு கவித்துவமாக, இவ்வளவு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தும் கடைசியில் வரும் அந்த ஒற்றைக்காட்சியினால் ஒன்றுமே இல்லாத வெறுமையாய் எஞ்சுகிறது சினிமா. இதிலுள்ள துயரத்தின் வரிகளாளல்ல, துயரத்தின் முன்னாலும் பின்னாலும் இருந்த துரோகத்தினாலேயே அந்த இரவு எனக்கு தூக்கமற்ற இரவானது.
0000No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...