அதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)
அதை அதுவாக (3) அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (பாயிரம், அறன்வலியுறுத்தல் 7) குறள் 37 சிவிகையைத் தாங்கியும், அதில் ஏறிச்செல்லும் நிலைமைகளிலும் உள்ளவர்களிடம் அறத்தின் பயன் இதுவெனக் கூறவேண்டாம். 00 டாக்டர் மு.வரதராசனும் தன் ‘திருக்குறள் தெளிவுரை’யில் மேற்கண்டவாறே பொருள் சொல்லியிருக்கிறார். அறம் செய்வதனாலாகும் பயனை அதில் ஊர்பவனைக்கொண்டும், அறம் செய்யாததனாலாகும் தீங்கை அதைச் சுமந்து செல்பவனைக்கொண்டும் அறியலாம் என்பார் நாமக்கல் கவிஞர். இவற்றைக்கொண்டு அளவிட்டுவிடக்கூடாது என்பார் தமிழண்ணல். பசியோடு இருக்கும் ஒருவனிடத்தில் உபதேசம் செய்யாதே என்றார் சுவாமி விவேகானந்தர். பசித்தவனுக்குத் தேவை உணவு. அதனால் சிவிகை சுமக்கும் அந்த வறியவனுக்குப் போதனை செய்யாதே என்று வள்ளுவன் சொன்னதாகக் கொள்ளலாம். சிவிகையிலூர்பவனும் உபதேசத்தைக் கேட்கமாட்டான். ஏனெனில் அவன் மமதையிலிருப்பான். பல்லக்கூர்தல் எவராலும் செய்யப்பட்டுவிடக் கூடியதல்ல. அரசர், அரச சுற்றம், மந்திரி, பிரதானிகள், வணிகர், அறிவோர் என்று சமூக அந்தஸ்துள்ளவர்கள் மட்டுமே பல்லக்குப் பாவிக்கும் தத்துவம் பெ...